பேராசிரியர் இரா. ஆண்டி அவர்கள் ஒரு சமூக ஆர்வலர். திராவிட இயக்க அறிஞர். அவர் 14-05-1931 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அழகனாபுரம் என்னும் சிற்றூரில் ராசையா- செல்லம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
தொடக்கப் பள்ளிக் கல்வியை பக்கத்து ஊரான கோட்டவிளையில் இருந்த அரசு தொடக்கப் பள்ளியில் கற்ற இவர், உயர் பள்ளிக் கல்வியை சுசீந்திரம் S. M. S. M மேல்நிலைப் பள்ளியில் கற்றார். பின் கல்லூரிப் படிப்பை நாகர்கோயில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் பயின்றார்.
படிப்பை முடித்தபின் தமிழ்நாடு மின்வாரியத்தில் கணக்கராக சில காலம் பணியாற்றிய இவர், கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
பின்னர் அகத்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் சில் காலம் விரிவுரையளாராகப் பணியாற்றி, ஓய்வு பெரும் வரை நாகர்கோவில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
சிறு வயதிலேயே திராவிடக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு கடைசி காலம் வரை கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்தார்.
பல நாடுகளுக்கும் சென்று, அந்த அனுபவங்ககளைக் கட்டுரையாக எழுதியுள்ளார்.
நவம்பர் 21, 2011 அன்று இயற்கை எய்தினார்.
பேராசிரியர் நல்ல பேச்சாளர்; நல்ல எழுத்தாளர். அவருடைய கட்டுரைகள் பல இதழ்களில் வெளிவந்துள்ளன.
அவர் எழுதி வெளிவந்த நூல்கள்:
1. உழைப்பால் உயர்ந்த உத்தமர் சுயம்புலிங்கம்
2. குமரி தந்த தொழில் மேதை குமாரசாமி
3. என் எழுத்துக்கள்
4. என் அனுபவங்கள்
5. Sir...(ஆங்கிலம்)
6. திராவிட இயக்கம் வளர்ச்சியும் தளர்ச்சியும்

No comments:
Post a Comment